Super User / 2011 பெப்ரவரி 23 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.விவேகராசா)
யுத்தம் எவ்வளவு கொடூரமானது என்பது யுத்தம் முடிந்த பின்னர்தான் எங்களுக்கு தெரிகின்றது இவ்வாறு தனது பெயரை வெளியிட விரும்பாத வன்னிப்பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞன் தெரிவிக்கின்றார்.
யுத்த காலத்தில் கண்ணிவெடியில் சிக்கி தனது வயது கால் முழங்காலுடன் இழந்து இந்த இளைஞன் வவுனியா அரசினர் பொதுவைத்தியசாலையில் வெளிநாட்டு வைத்தியர்களுடைய நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்கை கால் பொருத்தும் நிலையத்தில் சந்தித்தபோது இதனை கூறினார்
கம்போடிய நம்பிக்கை நிதியம், நிப்போன் மன்றம் ஊடாக யுத்த காலத்தில் கால்களை இழந்தவர்களுக்கு ஜெயப்பூர் முறையிலான செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
வழமைபோல் அனைத்து பணிகளையும் செய்யக்கூடிய முறையிலான செயற்கை கால்கள் இங்கு பொருத்தப்பட்டுவருகின்றது என இங்கு பணியாற்றும் வெளிநாட்டு வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
நாள் ஒன்றுக்கு மூன்று தொடக்கம் 5 பேருக்கு கால்களை பொருத்தக்கூடிய வசதிகள் தம்மிடம் உள்ளதாகவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஊன்று தடியுடன் நடமாடி வந்த, தனக்கு இந்த கால் பொருத்தி நடக்ககூடிய வசதி ஏற்பட்டதினை அவர் மகிழ்ச்சியடைவதோடு வைத்தியர்களுக்கும் நன்றி தெரிவிக்க தவறவில்லை.
இலவசமாக வழங்கப்படும் இந்த சேவை மூலம் கடந்த மூன்று மாத காலத்தில் 50 பேருக்கு செயற்கைகால்கள் பொருத்தப்பட்டுள்ளன என வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எஸ் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
நாளுக்கு நாள் வருபவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் பணிப்பாளர், விபத்தின் போது கால்களை இழந்தவர்களுக்கும் செயற்கை கால்கள் பொருத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
.jpg)
18 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago