2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

'மஹிந்த ராஜபக்ஷவின் அரசு மூலமே கிராம அபிவிருத்தியை காணமுடியும்'

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (ரி-விவேகராசா)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் மூலமே கிராமங்களுடைய அபிவிருத்தியை நாம் காணமுடியுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வவுனியா தெற்கு தமிழ் பிரிவு பிரதேசசபைக்குரிய வேட்பாளர் வெள்ளைசாமி மகேந்திரன் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை வவுனியா-  கணேசபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

ஆட்சியிலுள்ள அரசாங்கத்துடன் இணைந்து போவதன் மூலம் கிராமங்கள் அபிவிருத்தி அடையும.; அத்துடன் பல நன்மைகளும் கி;டைக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

பிரதேசசபை தேர்தல் என்பது கிராம அபிவிருத்தியாகும். இதற்கு நாங்கள் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலம் பல  விடயங்களை பெற்றுக்கொள்ளமுடியுமென குறிப்பிட்ட இவர், தமிழ் பிரதேசசபையைப் பொறுத்தமட்டில்  கிராம மட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளது. அதனை நிவர்த்தி செய்யவேண்டுமானால் ஆளும் கட்சி உறு;ப்பினருக்கு அதிகாரம் வரவேண்டும். இதன் ஊடாக மக்களுடைய தேவைகள் நாம் அரச உயர்மட்டத்தினரின் கவனத்திற்கு கொண்டுவரமுடியும். வீதிகள் பொதுக்கிணறு, மயானங்கள், சிறுவர் பாடசாலைகள், புனரமைக்கப்பட வேண்டியுள்ளது.  நீண்ட காலம் தாம் வசிக்கின்ற காணிகளுக்கு பலருக்கு உரிமைப்பத்திரம் இல்லாமை பெரியதொரு குறைபாடாகவுள்ளது. ஆட்சியாளர்களுடன் இணங்கிப்போவதன் மூலம் பிரதேச அபிவிருத்தியியை  நிறைவேற்றலாம.; அதற்காகவே பிரதிநிதித்துவமும் பலமும் எமக்கு தேவைப்படுகின்றது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--