Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான உலக உணவுத்திட்ட களஞ்சியசாலையில் நிதி மோசடி இடம்பெற்றிருப்பாதாக அரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்ததையடுத்து அதில் கடமையாற்றும் இருவரை மன்னார் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார், முருங்கன், செம்மண்தீவு பகுதியிலுள்ள உலக உணவுத்திட்ட களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டிருந்த உலர் உணவுப்பொருட்கள் திருட்டுத்தனமாக வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற புகாரையடுத்து மன்னார் மாவட்ட செயலக மட்டத்தில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்றன.
இதன் போது சுமார் 4 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இக்களஞ்சியசாலையில் இருந்து மன்னார் பகுதியில் உள்ள கிளை கூட்டுறவு கடைகளுக்கு இவ்வுலர் உணவுப் பொருட்கள் அனுப்பிவைப்பதாக கூறி வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டதும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இக்களஞ்சியசாலையின் பொருப்பாளரும், இவருடன் இணைந்த ஒருவரையும் மன்னார் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் அரச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையிலும், கணக்கெடுப்பிலும் இம்மோசடி 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
01 Jul 2025