2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

பிரதேசவாதத்துடன் மக்களை சிரமத்தில் ஆழ்த்துபவர்களுக்கு தேர்தல் பின்னடைவையே கொடுக்கும் : றிஸாத்

Kogilavani   / 2011 மார்ச் 02 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்சாத் றஹ்மத்துல்லா )

இனவாதம், பிரதேசவாதங்களை கலந்து மக்களை சிரமத்துக்குள் ஆழ்த்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் கட்சிகளுக்கு இந்த தேர்தல் பெரும் பின்னடைவையே கொடுக்கும் என்று கைத்தொழில், மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதீயுதீன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் பாண்டியன்குளம், நட்டாங்கேணி, பூவரசன் குளம், மடுக்கரை, பெரிய பண்டிவிரிச்சான், பாலம் பிட்டி, தட்சனா, மருதமடு பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அமைச்சர் அங்கு பேசுகையில் கூறியதாவது :

கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று மீண்டும் அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேஅறிவருகின்றனர். 30 வருட பயங்கரவாதம்  ஒழிக்கப்படுவதற்காக பல இழப்புகளை நாம் சந்தித்துள்ளளோம். அந்த இழப்புகள் ஈடு செய்யப்பட முடியாதது. இருந்த போதும் முழுமையாக இழந்ததை நாம் மெதுவாக பெறக் கூடிய நிலை தற்போது உருவாகி வருகின்றது.

இந்த சாதகமான நிலையிலிருந்து நாம் சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாறக் கூடாது. இன்றைய தேர்தல் காலத்தில் பல கட்சிகள் மக்களின் உரிமை என்று சொல்லிக் கொண்டுவருவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மக்கள் படும் கஷ்டங்களுக்கான விமோசனத்ததையும், ஈடேற்றத்ததையும், அபிவிருத்திகளையும் பெற்றுக் கொடுக்க முடியாது. மக்களின் போராட்டம் தான் அவர்களுக்கு தேவையானது.

கொடிய யுத்தத்தால் எமது எத்தனை உயிர்களை; இழந்திருக்கின்றோம், எத்தனை பேர் அங்கவீனர்களாக மாறியிருக்கின்றோம். இந்த வேதனை எமக்கு போதாதா? மீண்டும் ஒன்றுபடுவோம், போராடுவோம் என்று அழைப்பவர்களது குடும்பங்கள் எங்கே வசிக்கின்றார்கள். பிள்ளைகள் எங்கே கல்வி கற்கின்றார்கள், இவர்களது பிள்ளைகள் போராட்டத்தில் நின்றவர்களா, என்றால் பதில் என்ன தெரியுமா, அவர்களது உறவுகள் எல்லாம் கடல் கடந்த வெளிநாட்டில் தான் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கும் உரையாற்றினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--