Suganthini Ratnam / 2011 மார்ச் 03 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் திருக்கேதீஸ்வர சிவராத்திரி தினத்தில் பக்தர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், கையடக்கத்தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளதாக திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி கடமைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பலவந்தமாக தங்க நகைகள் அறுத்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் பல பக்தர்களது ஆபரணங்கள் அறுத்தெடுக்கப்பட்டபோது காயத்திற்குள்ளாகியதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பலபேரினது கைப்பைகளும் திருடர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் கையடக்கத் தொலைபேசி, தேசிய அடையாள அட்டை, பணம் ஆகியனவும் பறிபோயுள்ளன.
இருப்பினும் திருட்டில் ஈடுபட்ட பலர் கையும் களவுமாக மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் விசாரணைக்காக மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்ற நிலையில், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இம்முறை பல இலட்சக்கணக்கான பக்தர்கள் சிவராத்திரிக்காக திருக்கேதீஸ்வரத்திற்கு வருகை தந்திருந்தனர்.
9 minute ago
3 hours ago
27 Oct 2025
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
3 hours ago
27 Oct 2025
27 Oct 2025