Super User / 2011 மார்ச் 25 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வவுனியா கிளை இன்று வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிளையில் கடமையாற்றி பணியாளர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதாக என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் வட மாகாணத்திலிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அனைத்து கிளைகளும் மூடப்பட்டுள்ளன.
1997ஆம் ஆண்டு முதல் கடந்த 14 வருடங்களாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வனியாவில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .