Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 02 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா பொது வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சை பிரிவு வவுனியா மன்னார் வீதியிலுள்ள சாளம்பைக்குளத்தி;ல் கட்டப்படவுள்ளது.
தெஹிவளை மெற்றோ லயன்ஸ் கழக மாவட்ட 306ஏ1 கிளை அனுசரனையுடன் வெளிநாட்டிலிருந்து கிடைத்துள்ள சுமார் 140 மில்லியன் ரூபாய் செலவில் இந்த சிகிச்சை நிலையம் அமைக்கப்படும் என இந்த திட்டத்தின் தலைவி திருமதி மாலினி ஜெயவர்த்தனா தெரிவித்தார்.
லயன்ஸ் ஆளுநர் சுனில் தர்மரட்ன மற்றும் லயன்ஸ் முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்ட ஆரம்ப வைபவம் சாளம்பைக்குளத்தில் இன்று சனிக்கிழமை காலை சுப நேரத்தில் மண்வெட்டி பிடித்து நிலத்தை கொத்தி ஆரம்பித்துவைத்தார்கள்.
அதற்கு முன்னர் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலும் இடம்பெற்றது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிவான் சுரேஸ் சந்திரன், முன்னாள் லயன்ஸ் ஆளுநர் அன்வர்டோல், தெஹிவளை மெற்றோலயன்ஸ் தலைவர் எம் ரி-பாறுக், வவுனியா லயன்ஸ் கழக இணைப்பாளர் எஸ் சிவபாலன், வவுனியா விசேட பொலிஸ் அதிரடிப்படை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம் ஜெயவீர, உள்ளிட்ட பலர் இந்த ஆரம்ப வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர்
வட மாகாணத்திற்கு மத்திய நிலையமாக வவுனியா விளங்குவதினால் சாளம்பைக்குளத்தில் ஐந்து ஏக்கரில் இந்த சிகிச்சை நிலையம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
சிகிச்சை நிலையத்திற்கு தேவைப்படும் சகல உபகரணங்களையும் லயன்ஸ் கழகம் வழங்கவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago