Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்)
பளை பேராலைப் பகுதியில் மீளக்குடியேறிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு பொதுநோக்கு மண்டபம் ஒன்று நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது.
யு.என்.டி.பி யின் நிதிப் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இந்த மண்டபத்தை நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் முகுந்தன், பச்சிலைப்பள்ளி அபிவிருத்திப் பேரவையின் தலைவரும் மாவட்டச் செயலகத்தின் திட்டமிடற் பணிப்பாளருமாகிய அ.கேதீஸ்வரன், யு.என்.டி.பியின் பொறியிலாளர் கடம்பேஸ்வரன், திட்ட இணைப்பாளர் சுதர்சன், சோறன்பற்று சி.சி.த.க பாடசாலை அதிபர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உரையாற்றும்போது பேராலைப் பகுதிக்கான பிரதான வீதியின் புனரமைப்புப் பணிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்தப் பாதையின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பாடசாலையின் புனரமைப்பு நடவடிக்கைகள் துரிதமாக முடித்து வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
20 Oct 2025
20 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
20 Oct 2025
20 Oct 2025