Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
மீளெழுச்சித் திட்டத்தின் கீழ் மன்னார், முசலிப் பிரதேச செயலகப் பிரிவில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக 147 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுக்கவுள்ளதாக முசலி பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹூனைஸ் பாரூக் தெரிவித்தார்.
முசலி பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் முசலி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
கடந்த சில மாதங்களாக இத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் தானும் எடுத்த முயற்சியால் மீண்டும் அவை நடைமுறைக்கு வந்துள்ளது. குறுகி;ய காலத்துக்குள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்குமாறு கிராம அபிவிருத்தி அமைப்பினருக்கு ஹுனைஸ் பாரூக் ஆலோசனை வழங்கினார்.
உட்கட்டமைப்பு வசதிகள், பொதுக்கட்டிடங்கள், வாழ்வாதார ஊக்குவிப்பு முயற்சிகளுக்கான சுழற்சி முறையான கடன் திட்டம் என்பன மீளெழுச்சித் திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளதெனவும் அவர் கூறினார். அத்துடன் வயற்காணி துப்பரவு செய்தல், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை சிலாவத்துறையில் 1.7 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபாலகம் அமைப்பதற்கான அனுமதி பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின்போது வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிபாவா பாரூக், முசலி பிரதேசசபைத் தலைவர் தேசமான்ய யஹ்யான், பிரதேச செயலாளர் உட்பட திணைக்களத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago