Suganthini Ratnam / 2011 ஜூன் 09 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
முல்லைத்தீவு வன்னி விளாங்குளம் கண்ணகை அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
நாளை மாலை 6 மணிக்கு தொடங்கும் சமய உற்சவம் மறுநாள் சனிக்கிழமை அதிகாலை பொங்கலுடன் நிறைவுபெறவுள்ளது.
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் இந்த பிரசித்தி பெற்ற ஆலயம் உள்ளது.
உற்சவத்திற்கு வரும் மக்களுடைய நலன் கருதி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் சுகாதார வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர். தமது நேர்த்திக் கடனை தீர்க்க பெருமளவு மக்கள் இங்கு கூடுவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .