2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 13 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்,கவிசுகி, கிரிசன்)

கிளிநொச்சி, பரந்தன், உமையாள் புரத்தில் பலத்த அடிகாயங்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலமொன்று கிளிநொச்சி பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த ஆனந்த சமரக்கோன் (வயது 41) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். அவரது சடலம் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .