2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யுத்தத்தில் கணவனை இழந்த பெண்கள் சுயதொழிலில் ஈடுபட உதவி தேவை

Menaka Mookandi   / 2011 ஜூன் 14 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி விதவைப் பெண்கள் தங்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் அதனால் அவர்கள் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான உதவிகளை செய்யுமாறு கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 'வன்னியில் இடம்பெற்ற மோதலின் போது அதிகளவான பெண்கள் தமது கணவனை பலி கொடுத்துள்ளனர். குறித்த பெண்களுக்கு உரிய முறையில் எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் தங்களது குடும்பத்தினை வழிநடத்திச் செல்லுவதற்கு முடியாமல் பாரிய பொருளாதார சிக்கலின் உள்ளனர்.

இவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த சுயதொழில் முயற்சியில் ஈடுபட விரும்புகின்றனர். குறிப்பாக இவர்களுக்கு ஆடு, மாடு, கோழி போன்றவற்றினை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இவர்கள் தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

எனவே வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து விதவைகளாக்கப்பட்ட பெண்களுக்கு சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .