2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ஆனைவிழுந்தானில் புதிய சந்தை

Suganthini Ratnam   / 2011 ஜூன் 18 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)
 
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஆனைவிழுந்தான் பகுதியில்  இன்று சனிக்கிழமை காலை புதிதாக  பொதுச்சந்தையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக சந்தையொன்று அமைக்கப்பட வேண்டுமென்பதற்கிணங்க இந்தச் சந்தையை கரைச்சிப் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் கெயர் (ஊயுசுநு ) நிறுவனம் அமைத்துக்கொடுத்துள்ளது.

ஆனைவிழுந்தான் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்  சபாநாயகம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் சந்தையைத் திறந்து வைத்தார். பெயர்ப்பலகையை கெயர் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மைத்திரி திரைநீக்கம் செய்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X