Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூன் 19 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
கிளிநொச்சி தொழிநுட்பக்கல்வி நிலையம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அதிகவளத்தைச் சேர்க்கின்றது. தற்போதுள்ள தடைகள் நீக்கப்பட்டு இந்த தொழில்நுட்ப கல்வி நிலையம் விரைவில் தரமானதொரு தொழிநுட்பக் கல்வி நிலையமாக மாறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பாரம்பரியக் கைத்தொழில்கள் சிறுகைத்தொழில் முயற்சி அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி தொழிநுட்பக்கல்வி நிலையத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று சனிக்கிழமை மாலை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இந்தத் தொழிநுட்பக் கல்வி நிலையத்தின் வளங்கள் அதிகரிக்கப்பட்டு தரமான கல்விச் செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டிய தேவை இன்று உணரப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு இந்த நிறுவனத்தை தரமுயர்த்த எம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். அத்துடன் கடந்த காலத்தில் இந்த நிறுவனத்திற்கு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கிளைகள் இருந்தன. எனவே எதிர்காலத்தில் அவற்றையும் இயங்க வைப்பதற்கு இந்த வருட இறுதிக்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் இந்த தொழில்நுட்பக் கல்வி நிலையத்திற்கு ஒரு மாதத்திற்குள் பத்து கணினிகள் வழங்கப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வடமாகாண பிரதி பிரதம செயலாளர் இராசநாயகம், அரச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன், 57ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் லசந்த விக்கிரமசூர்ய, அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் வைரமுத்து, கல்வி நிறுவனத்தின் அதிபர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago