2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மன்னார் பள்ளிமுனை வீதி திறந்து வைப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 20 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த மன்னார், பள்ளிமுனை கடற்கரைப்பகுதியிலுள்ள பிரதான வீதி மக்களின் போக்குவரத்திற்காக இன்று திங்கட்கிழமை காலை திறந்துவிடப்பட்டுள்ளது.

மன்னார் பள்ளிமுனை கடற்கரைப்பகுதியிலுள்ள பிரதான வீதியை  கடற்படையினர் 20 வருடங்களுக்கும் மேலாக மூடிவைத்துள்ள நிலையில்,  பொதுமக்கள் தொடர்ந்து அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்திருந்தனர். இந்த நிலையில் மேற்படி வீதியைத் திறந்துவிடுமாறு  மன்னார் நகரசபை விடுத்த கோரிக்கையையடுத்து  மேற்படி வீதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி வீதியை திறந்து வைக்கும் வைபவத்தில் கடற்படை அதிகாரிகள் மற்றும் மன்னார் நகரசபையின் உறுப்பினர்களான இ.குமரேஸ் மற்றும் மெரினஸ் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .