2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மன்னாரில் நாளாந்தம் மின்வெட்டு

Menaka Mookandi   / 2011 ஜூன் 21 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மின்சாரம் அடிக்கடி தடைப்படுவதினால் மின்சாதனப்பொருட்கள் பழுதடைவதோடு பாடசாலை மாணவர்களின் இரவு நேர கற்றல் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டு வருவதாக மின் பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
 
இரவு 8 மணிக்குப்பின் தடைப்படும் மின்சாரம் மறுநாள் காலையே மீண்டும் வழமைபோல் வருகின்றது. குறித்த மின்தடங்களினால் மன்னார் மாவட்டத்தில் இம்முறை உயர்தரப்பரீட்சை எடுக்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்து வருவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் மின்சார சபை அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள அதியுயர் மின் கோபுரங்களில் உள்ள மின் கம்பிகளில் உப்பு படிவதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும் இதற்கு தற்போது வீசிவரும் காற்றே காரணம் எனவும் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .