Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூன் 21 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
வெற்றிடமாகவுள்ள வவுனியா நகரசபையின் தலைவர் பதவிக்கு சபை உறுப்பினரான ஐயாத்துரை கனகையாவை நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் புனரமைக்கப்பட்ட வவுனியா வரியிருப்பாளர் சங்கத்தினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக பெரும்பான்மை நகரசபையின் 9 உறுப்பினர்கள் கனகையாவை தலைவராக நியமிப்பதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என இணக்க கடிதத்தில் ஒப்பமிட்டிருந்தனர்.
கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக சபை நிர்வாகம் நடைபெறவில்லை. மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. நகர எல்லைக்குள் அபிவிருத்தி செயல்பாடுகள் முடங்கியுள்ளது. இந்த நிலையில் உடனடியாக சபை கூட்டம் இடம்பெறவேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில் வரியிருப்பாளர் சங்கம் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணக்கத்தை ஏற்படுத்த பேச்சுக்களை நடத்தியது. நேற்று செவ்வாய்க்காலை வவுனியா வந்திருந்த தமிழரசு கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா வரியிறுப்பாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் சபை உறுப்பினரான கனகையாவை தலைவராக நியமிக்க இணக்கம் தெரிவித்தார்.
புதிய தலைவர் பதவி ஏற்கும் வரைக்கு உபதலைவர் எம்.எம்.ரதன் தலைமையில் சபைக் கூட்டத்தை நடத்த நிர்வாக செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு மாவை சேனாதிராசா ஆலோசனை தெரிவித்துள்ளார்.
9 minute ago
19 minute ago
26 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
26 minute ago
31 minute ago