Suganthini Ratnam / 2011 ஜூன் 22 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.ஜெனி)
சைக்கிளின் உதிரிப்பாகங்களான டைனமோ மற்றும் மணி பொருத்தப்படாத நூற்றுக்கணக்கான சைக்கிள்கள் பொலிஸாரால் மன்னார் நகரப்பகுதியில் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் நகரப்பகுதியிலுள்ள சகல இடங்களிலும் மறைந்து நின்ற வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார், வீதிகளில் பயணித்த சைக்கிள்களை பரிசோதித்தனர். இதன்போது டைனமோ மற்றும் மணி பொருத்தப்படாத சைக்கிள்களை உரிமையாளர்களிடமிருந்து பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
சைக்களின் உதிரிப்பாகங்களான டைனமோ, மணி ஆகியவற்றை கடைகளிலிருந்து கொள்வனவு செய்துகொண்டு இன்று புதன்கிழமை காலை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அங்கு பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள அவரவர் சைக்கிள்களுக்கு டைனமோ, மணி ஆகியவற்றை பொருத்திவிட்டு சைக்கிள்களை பெற்றுச்செல்லுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
17 minute ago