Kogilavani / 2011 ஜூன் 23 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹேமந்த்)
கிளிநொச்சி மாவட்டத்தில் இரு பொதுநோக்கு மண்டபங்கள் திறந்து வைக்கப்பட்டன. பொருளாதார அமைச்சின் மீள் எழுச்சித் திட்ட நிதிப்பங்களிப்பில் செல்வா நகரில் ஒரு பொது நோக்கு மண்டபமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நிதி அனுசரணையுடன் உமையாள்புரம் பரந்தனில் ஒரு பொது நோக்கு மண்டபமும் இதன்போது திறந்து வைக்கப்பட்டன.
இம் மண்டபகங்களை நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் திறந்து வைத்தார்.
செல்வா நகரில் இடம்பெற்ற திறப்பு விழாவில் சமூகபொருளாதார அமைச்சின் பால்நிலை சமத்துவ அதிகாரி திருமதி கல்யாணி சமரசிங்க மற்றும் மீழ் எழுச்சித்திட்ட பிரதித்திட்ட பணிப்பாளர் ராஜசுவேந்திரன், வடக்கு மாகான சபையின் பிரதி பிரதம செயலாளர் ராசநாயகம், கிளிநொச்சி மாவட்ட உதவித்திட்ட பணிப்பாளர் கௌரிதாசன், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
உமையாள்புரத்தில் இடம்பெற்ற திறப்பு விழாவில், கரைச்சிப் பிரதேச செயலர் சத்தியசீலன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர் நவநீதன், பொறியியலாளர் கடம்பசீலன், கிராம அலுவலர் சேகர், 661 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பிரதேச மாதர் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
.jpg)
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026