2021 மே 10, திங்கட்கிழமை

முருங்கன் கிராமத்தில் புனித சந்தியோகுமையோர் நாடக அரங்கேற்றம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் முருங்கன் கிராமத்து கலைஞர்களினால் அரங்கேற்றம் செய்யப்படும் புனித சந்தியோகுமையோர் நாடக நிகழ்வு எதிர்வரும் 18ஆம் 19ஆம் 20ஆம் திகதிகளில் இரவு 8 மணிக்கு முருங்கன் கிராமத்தில் நடைபெறவுள்ளது.

முருங்கன் பங்குத்தந்தை அருட்தந்தை க.அ.அருள்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் 18ஆம் திகதி  நிகழ்வில் முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகையும் இரண்டாம் நாள் நிகழ்வான 19ஆம் திகதி முதன்மை விருந்தினராக நானாட்டான பிரதேச செயலாளர் க.அ.சந்திரஐயாவும் மூன்றாம் நாள் நிகழ்வான 20ஆம் திகதி முதன்மை விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X