Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கபில்)
வவுனியா மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்களை குறைப்பதற்கு பெற்றோர்கள் விழிப்புணர்வடைவதுடன் தமது பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்றுவரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பாடசாலையில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை வட மாகாண ஆளுனரிடம் கையளித்துள்ளோம். அதற்குமப்பால் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு காலை 7.30 மணிக்கே அனுப்பவேண்டும். அதேபோல் பாடசாலை விட்டு தமது பிள்ளைகள் குறித்த நேரத்திற்கு வருகின்றார்களா என்பதிலும் கூடிய கவனம் செலுத்தவேண்டும்.
பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னரும் பாடசாலை விட்டபின்னரும் விசேட வகுப்புகள் மற்றும் பாடசாலை சம்பந்தமான செயற்பாடுகளுக்கு மாணவர்கள் சமுகம் முகம் கொடுக்கவேண்டுமாயின் வகுப்பாசிரியரின் எழுத்து மூலமான அனுமதியும் எழுத்து மூலமான கோரிக்கைகளையும் பெற்றோர் பார்வையிடவேண்டும்.
அதன்பின்னரே பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புதல் வேண்டும் எனவும் தெரிவித்ததுடன் தனியார் கல்வி நிலையங்கள் காலை 6 மணிக்கு முன்னரும் மாலை 6 மணிக்கு பின்னரும் வகுப்புகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.தனியார் கல்வி நிலையங்கள் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்படவேண்டும் அவ்வாறு பதிவு செய்யப்பட்டாலே அதனை இயக்க முடியும் அத்துடன் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் முடிவடையும் வரை பெண் ஊழியர் ஒருவர் பணியில் இருக்க வேண்டும்.
வவுனியாவில் காணப்படும் இன்ரநெட் கபே அனைத்தையும் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளதுடன் பொலிஸாரை திடீர் சோதனை நடத்துமாறும் பணிக்கப்பட்டுள்ளது. எனவே சிறுவர்கள் இன்ரநெட் கபேக்களை பாவிப்பதை பெற்றோரும் கடை உரிமையாளர்களும் கவனிக்க வேண்டும்.
இதேவேளை பாடசாலை சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் மற்றும் பேரூந்துகள் வவுனியா நகரசபை மற்றும் போக்குவரத்து பொலிஸிலும் பதிவுகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.
2 hours ago
22 Oct 2025
22 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
22 Oct 2025
22 Oct 2025