2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

மறைந்த ஊடகவியலாளர் விவேகராசாவிற்கு அனுதாப பிரேரணை

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

கடந்த மாதம் மரணமடைந்த ஊடகவியலாளர் விவேகராசாவின் அயராத சேவையினால் வன்னிப் பிரதேசத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் கடந்த மாதாந்த கூட்டத்தொடரில் இடம்பெற்ற விவேகராசாவின் அனுதாபபிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசசபையின் தலைவர் க.சிவலிங்கத்தின் தலைமையில் கூட்டம் இடம்பெற்றபோது விவேகராசாவுக்கு 2 நிமிட மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தலைவரினால் இரங்கல் உரையும் ஆற்றப்பட்டது. அதன்போது உரையாற்றிய தலைவர் எம்மையும் எம்மக்களையும் விட்டுப்பிரிந்த அமரர் தம்பு விவேகராசாவின் இழப்பு எமக்கு பேரிழப்பாகும். அவர் எமது மாவட்டத்தில் கல்வி கற்று ஊககத்துறையில் சேவை மனப்பாங்குடன் ஆர்வத்துடன் பணியாற்றி மகிழ்வுடன் உறவாடி மாவட்டத்தின் குறைகள், தேவைகள், நிறைவுகளை பத்திரிகைகள் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்ததுடன் எம்மக்களுக்காக குரல் கொடுத்த மாமனிதன் மட்டுமல்லாது நாட்டின் சூழ்நிலை பாராது போர் காலகட்டத்திலும் மக்களின் துயரத்தை தன்னால் இயன்றளவு வெளிக்கொணர்ந்தார். அவரது குடும்பத்தினருக்கு எமது சபையின் சார்பில் அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய சபை உறுப்பினர் க.சுபாகரன்:

30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் இணைந்து தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டவர். இவரது பெயருக்கு ஏற்றாற்போல் விவேகமாக செயற்பட்டவர். யுத்தகாலத்தில் வன்னி மக்கள் பட்ட துன்பங்களையும் அவலங்களையும் துணிவுடனும் ஆர்வத்துடனும் வெளியிட்டதுடன் அரசியல் கட்சிப் பிரமுகர்களுடனும் சகஜமாக பழகி செய்திகளை வெளியிட்டுவந்தவர். விவேகராசாவின் அயராத சேவையினால் வன்னிப் பிரதேசத்தில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் க.சுபாகரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--