Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கபில்)
வீதியோர வியாபாரத்தினை நிறுத்தக்கோரி வவுனியா நகரசபைக்குட்பட்ட வரியிருப்பாளர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதியோர வியாபார நடவடிக்கையால் நகர மக்களது சாதாரண வாழ்க்கை முறை மிகவும் பாதிப்படைந்து காணப்படுகின்றது. அத்துடன் வீதி நெரிசல்கள், விபத்துக்கள் போன்றவை ஏற்பட்டு மக்கள் மிகவும் பாதிப்படைகின்றார்கள்.
எனவே இத்தகைய சட்டபூர்வமற்ற வியாபார நடவடிக்கைகளை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அடுத்து கூடவுள்ள நகரசபை மாதாந்த கூட்டத்தில் இத்தீர்மானங்களை சமர்ப்பித்து சரியானதும் நேர்மையானதுமாக தீர்மானங்கள் எடுத்து வவுனியா நகர வரியிருப்பாளர்களின் உரிமைகளையும் நன்மைகளையும் பாதுகாப்பீர்கள் என நம்புகின்றோம் என அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நகர அபிவிருத்தி தொடர்பாக இக்கூட்டத்தில் மேலும் 10 தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நகரசபையின் தலைவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன.
11 minute ago
11 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
11 minute ago
17 minute ago