2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கிளிநொச்சியில் பெண் வெட்டிக்கொலை

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி பகுதியில் 63 வயதான பெண்ணொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில்  வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டக்கச்சி பகுதியில் கட்டன் வீதியைச் சேர்ந்த பெண்ணே வெட்டிக்கொலை செய்யப்பட்டவர் ஆவார்.

நேற்று சனிக்கிழமை மாலை குறித்த பெண்ணின் வீட்டிற்கு வந்த மூன்று நபர்கள்  அவ்வீட்டிலேயே  இரவுநேர உணவை உட்கொண்டுவிட்டு தங்கியுள்ளனர்.  இந்த நிலையில், மூன்று நபர்களுக்கும் குறித்த பெண் உணவு பரிமாறிவிட்டு தானும் உறங்கச் சென்றுள்ளார். இரவு ஒரு மணியளவில் இந்த மூன்று நபர்களும் அப்பெண்  அணிந்திருந்த தங்கநகைகளை பறிக்க முற்பட்டபோது  குறித்த பெண்ணிற்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறியில் குறித்த பெண்; கத்தியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் கூறினர்.

இந்த மூன்று சந்தேக நபர்களில்  ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--