2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வாக்காளராக பதிவு செய்யுமாறு சுவரொட்டிகள்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கபில்)

இடம்பெயர்ந்த மற்றும் வாக்காளர் இடாப்பில் தமது பெயர்களை பதிவு செய்யாதவர்கள் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்கான  இறுதித் திகதி எதிர்வரும் 15ஆம் திகதியுடன் முடிவதையொட்டி வவுனியாவின் பல பகுதிகளிலும் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இச்சுவரொட்டிகளில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் வாக்குரிமையினை பாதுகாத்துக் கொள்ளுங்களெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விழிப்புணர்வு சுவரொட்டிகளை யு.எஸ்.எயிட் நிறுவனம் மற்றும் கபே தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து செயற்படுத்தி வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X