Editorial / 2025 டிசெம்பர் 17 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மாசார் அ.த..க பாடசாலை அதிபர் த.ஜெபதாஸ் ? பாடசாலையில் செய்து வருகின்ற ஊழலுக்கு எதிராக பாடசாலை சமூகத்தால் புதன்கிழமை (17) அன்று காலை 7.30 மணியளவில் அமைதி வழியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப் படட்டது
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை அதிபரின் முறையற்ற செயற்பாடுகள் மற்றும் பாடசாலை சமூகத்தினை புறக்கணித்து தன்னிச்சையாக முடிவெடுத்தல் மற்றும் பாடசாலை கணக்கரிக்கைகளின் முறைகேடு பாடசாலைக்கு மக்கள் செய்யும் நன்கொடைகளில் ஊழல் மற்றும் சொந்த பகமையை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை புறக்கணித்தல் போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி குறித்த அமைதி வழி ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை சமூகம் அதிபருக்கு எதிரான பதாகைகளை ஏந்தி மிகவும் அமைதி வழியாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இதற்கான முடிவு கிடைக்கவில்லை என்றால் பாடசாலையினை முடக்கி ஆர்ப்பாட்டத்தை செய்வோம் என பாடசாலை சமூகத்தால் கூறப்பட்டதுடன்
இவ் முறைகேடுகள் தொடர்பாக பளை கோட்டக்கல்வி பணிமனை மற்றும் வலயம் மாகாண கல்வி திணைக்களம் போன்றவற்றிற்கு முறைப்பாட்டு கடிதங்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலும் இது சம்பந்தமாகவும் எந்த விதமான தீர்வு கிடைக்கவில்லை என்றும் பாடசாலை சமூகம் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்
மற்றும் இந்த முறை கேடு செயற்பாடுகளில் தற்போது ஆளும் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது என்றும் அதனை உடனடியாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு அதற்கான உடனடி தீர்வு எடுக்க வேண்டும் என பாடசாலை சமூகத்தால் கூறப்பட்டதுடன்
இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் என இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








24 minute ago
37 minute ago
46 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
37 minute ago
46 minute ago
53 minute ago