2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

பல்வேறு சவால்களுடன் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி இயங்குகின்றது: பீடாதிபதி

Kogilavani   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)
கல்வியியலாளர் வெற்றிடங்களும் கல்விசாரா ஆளணியின் வெற்றிடமும் பற்றாக்குறையாகவுள்ளது. பல்வேறு சவாலுடனேயே கல்லூரியை இயங்க செய்யவேண்டியுள்ள என  வவுனியா கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி க. பேணாட் தெரிவித்தார்.

கல்லூரியின் 18 ஆவது ஆண்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூhயில் ஆசிரிய கல்வியியலாளர்கள்  28 பேர் நிரந்தரமாக இருக்கின்றனர். இவர்களில் 8 பேர் கல்வி அமைச்சின் தற்காலிக ஏற்பாட்டில் வேறு ஆசிரிய கல்வி நிறுவனங்களில் கடமையாற்றி வருகின்றனர். அடுத்த ஆண்டு புதிய மாணவர் அனுமதியோடு வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி மீண்டும் முழு அளவில் செயலாற்ற தொடங்கவுள்ளதால் தற்காலிக இடங்களில் பணியாற்றும் எட்டு ஆசிரிய கல்வியியலாளர்களும் மீண்டும் வவுனியா கல்வியியல் கல்லூரிக்கு பணிக்கு திரும்புவர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

அத்துடன் வர்த்தக பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் அப்பாடநெறிக்கும் இரண்டாம் மொழி சிங்களத்திற்கான ஆசிரியர் பற்றாக்குரை நிலவுகின்றது.

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரிக்கு 2009, 2010 ஆம் ஆண்டுகளில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தமையினால் ஏற்பட்ட நிலை யாவரும் அறிந்த ஒன்று. எனினும் எனது இடையுறாத முயற்சியின் பலனாக கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட 11 மில்லியன் நிதியை பயன்படுத்தி கல்வி பகுதிக்கான விரிவுரை மண்டபங்கள் இரண்டு, மாணவர் விடுதிகளும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் என்ரிப் திட்டத்தினால் 5 மில்லியன் ஒதுக்கப்பட்டு மூன்று மாணவர் விடுத்தி புனரமைக்கப்பட்டன. இதன் காரணமாக 2011 ஆம் ஆண்டில் புதிய மாணவர்களை உள்வாங்க முடிந்தபோதிலும் புனரமைக்கப்பட்டு வரும் விடுதிகள் முழுமை பெறுமிடத்து அடுத்த ஆண்டுக்கான மாணவர்கள் தொகை அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்படுகின்றது.

மாணவர் விடுதி வசதிகளில் ஏற்பட்ட இடையூறுகள் திருத்த வேலைகள் முடிவுறாமை காரணமாக 2011 ஆம் ஆண்டில் 160 மாணவர்களுக்குள் கல்வி அமைச்சு மட்டுப்படுத்தி கொண்டது. அத்தோடு 2007, 2008, 2009 ஆம் ஆண்டுகளில் வன்னிப்பகுதியில் இருந்து அனுமதி பெற்றுக்கொள்ள முடியாமல் போன 5 மாணவர்களுமாக 2001 ஆம் ஆண்டில் மொத்தம் 165 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

போதிய விடுதி வசதியின்மையால் வரையறுக்கப்பட்ட மாணவர் தொகையின் காராணமாக கல்லூரியின் பயிற்சி நெறிகளும் மட்டுப்படுத்தப்பட்டன. குறிப்பாக கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமையினால் அம்மாணவர்கள் இப்பாட நெறிகள் இடம்பெறும் ஏனைய தேசிய கல்வியியல் கல்லூரிகளின் அனுமதியுடன் இங்கு சேர்க்கப்பட்டள்ளனர். அதேபோல் தகவல் தொழில்நுட்ப பாடநெறியும் உணவு தொழில்நுட்ப பாடநெறியும் ஏனைய கல்வியியல் கல்லூரியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் காராணமாக 6 பாடநெறிகளை 2011 ஆம் ஆண்டு மீள் ஆரம்பிக்கப்படமுடியாது போனது எனவும்; தெரிவித்தார்.

இந்நிகழவில் வவுனியா பொது வைத்தியசாலையின் அத்தியட்சகர் ரி. சத்தியமூர்த்தி, கல்லூரியின் உபபீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள், பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X