Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவரத்தினம்)
வவுனியா குருமண்காட்டுப் பகுதியிலுள்ள அரசியல் கட்சியொன்றின் அலுவலகத்திற்கு அருகில் அரசசார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் இருவர் இளைஞர் குழுவொன்றினால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் தமது அலுவலகக் கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அரசசார்பற்ற நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் இருவரும் வீதியில் வீழ்ந்து கிடந்த ஒருவரை தூக்கிவிட முற்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்திற்கு மதுபோதையில் வந்த இளைஞரொருவர் மேற்படி உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுள்ளார். இதன்போது வீதியில் வீழ்ந்து கிடந்தவரை தூக்கிவிடுவதற்கு தாம் உதவியதாகவும் அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள் குறித்த இளைஞருக்கு தெரிவித்தனர்.
இருப்பினும் தொலைபேசியில் தனது நண்பர்களுடன் உரையாடிய குறித்த இளைஞர், தனது நண்பர்களை அவ்விடத்திற்கு வரவழைத்து அவர்களின் உதவியுடன் அரசசார்பற்ற உத்தியோகத்தர்களை தடிகளால் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.
தலையில் பலத்த காயமடைந்த இருவரும் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கொலைக்குற்றம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டு அண்மையில் விடுதலையானவரென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
56 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago