2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மன்னார் மீனவர்கள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிப்பு

Kogilavani   / 2011 நவம்பர் 17 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்டத்தில் கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தமக்கு விதிக்கப்பட்டுள்ள சங்குகள் மற்றும் அட்டைகளை பிடிப்பதற்காண தடையை நீக்கக்கோரி மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றை இன்று வியாழக்கிழமை கையளித்துள்ளனர்.

மகஜர் கையளிப்பதற்காக மன்னார் பள்ளிமுனை புனித லூசியா மீனவர்கள் கூட்டுறவுச்சங்கம் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு மன்னார் மாவட்டத்தின் பல்வேறு மீனவ சங்கங்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் இருந்து ஆரம்பமான அமைதியான பேரணியானது மன்னார் பஸார் பகுதியூடாக வந்து மன்னார் அரச செயலகத்தை சென்றடைந்தது. இப்பேரணியில் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

பின் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர அலுவலகத்தில் இல்லாததன் காரணத்தினால் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி மோகநாதனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதன்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்காண மீனவர்கள் மகஜர் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .