2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

பியர் கிராம மக்களை செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. நேரில்ச் சென்று பார்வை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 20 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

தலைமன்னார் பியர் கிராமத்தில் இடம்பெயர்ந்து 8 வருடங்களுக்கு முன்னர் மீள்குடியேறிய மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று சனிக்கிழமை நேரில்ச் சென்று பார்வையிட்டுள்ளார்.

தலைமன்னார் பியர் கடற்கரையோரப்பகுதியில் மீள்குடியேறியுள்ள 36 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

தமது கிராமத்திற்கான மின்சார வசதி மற்றும் வீதியின்மை தொடர்பாக குறித்த கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து மின்சார வசதி, வீதி வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 வருடங்களாக தாம் ஓலைக்குடிசையிலே வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு எந்தவித உதவிகளையும் வழங்குவதற்கு  எவரும் முன்வரவில்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலாநாதனிடம், அம்மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .