Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 26 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவரத்தினம், எஸ்.ஜெனி)
இளைஞர்களின் வழிகாட்டி என போற்றப்படும் புனித தொன் போஸ்கோவின் திருக்கரம் அடங்கிய திருப்பவனி இன்று வவுனியாவை வந்தடைந்தது.
இன்று சனிக்கிழமை காலை 10.45 மணியளவில் வவுனியாவிற்கு வந்தடைந்த திருப்பண்டத்தினை நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அருட் சகோதரர்கள் வரவேற்றிருந்தனர்.
நகர மத்தியை வந்தடைந்த தென் பொஸ்கோவின் திருக்கர திருப்பவனி, நகர வீதி வழியாக கொண்டு சென்று இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் மக்கள் ஆசிக்காக வைக்கப்பட்டது.
இதன்பின்னர் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பல நூற்றுக்கணக்கான மக்கள் மழையினையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்திருந்து தொன் பொஸ்கோவின் அருளாசிகளை பெற்றுக்கொண்டமை குறிப்படத்தக்கது.
இதேவேளை, புனித டொன்பொஸ்கோவின் திருக்கரம் அடங்கிய திருப்பவனி நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னாருக்கு கொண்டுவரப்பட்டது.
மடு சந்திக்கு கொண்டுவரப்பட்ட பரிசுத்த பாண்டம், டொன்பொஸ்கோ நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதன்போது பல்லாயிரக்கனக்கான மக்கள் கடும் மழையிலும் திருப்பவனி வரவேற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
34 minute ago
58 minute ago
1 hours ago