2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பள்ளிமுனை கிராமத்திற்கு கஞ்சாவுடன் வந்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார், பள்ளிமுனை கடற்பரப்பினூடாக பள்ளிமுனை கிராமத்திற்குள் 40 கிலோ நிறையுடைய  கஞ்சாப் பொதியுடன் வந்ததாகத் தெரிவிக்கப்படும் இருவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் மன்னார் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி கஞ்சா பொதி கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாகவும் இது 40 இலட்சம் ரூபா பெறுமதியுடையதெனவும் மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட  சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மன்னார் பொலிஸார் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .