2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

நெளுக்குளம் மயானம் இரண்டாக பிரிக்கப்பட்டது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 09 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வவுனியா, நெளுக்குளம் பொதுமயானம் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இரண்டாக பிரித்து வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பிரதேசசபையின் உறுப்பினர் கே.சுபாகரன் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில்,

'நெளுக்குளம் பொதுமயானத்தில் நிலவிய இடப்பிரச்சினை தொடர்பில் பிரதேசசபை உறுப்பினர் என்ற வகையில் என்னிடம் மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சபையின் தலைவர் க.சிவலிங்கத்தின் தலைமையில் சபை தீர்க்கமான முடிவை மேற்கொண்டு கிறிஸ்தவர்களுக்கு ஒரு பகுதியையும் இந்துக்களுக்கு ஒரு பகுதியையும் வழங்கியது. அத்துடன், மயானத்தின் பின்பகுதி விளையாட்டு மைதானத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை சபையின் தலைவர் க.சிவலிங்கமும் நானும் நேரடியாக சென்று பார்வையிட்டு வழங்கியிருந்தோம்.

இதேவேளை, இந்த மயானத்தில் இனிவரும் காலங்களில் சமாதி அமைப்பதற்கு தடை விதித்துள்ளதுடன், ஞாபகார்த்தமாக சுற்றுமதில் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .