2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

மன்னாரில் தெரு மின்விளக்குகள் ஒளிராததால் மக்கள் சிரமம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 12 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்திலுள்ள பல தெரு மின்விளக்குகள் தொடர்ந்து ஒளிராதுள்ளதாகவும்  இதனால் இரவு வேளைகளில்  தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் நகரப்பகுதியில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட தெரு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் பல தெரு மின்விளக்குகள் ஒளிராதுள்ளன.

மன்னாரின் பல இடங்களிலும் தெரு மின்விளக்குகள் உள்ளபோதும், பல கிராம வீதிகளிலுள்ள தெரு மின்விளக்குகள் ஒளிராதுள்ளன. மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் ஒளிராத நிலையிலுள்ள தெரு மின்விளக்குகளை திருத்தி புதிய மின்குமிழ்களை பொருத்தும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும்  பல மின்விளக்குகள் ஒளிராதுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் மன்னார் மின்சாரசபையிடம் முறையிட்டபோதிலும்,  உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பல தெரு மின்விளக்குகள் பழுதடைந்த நிலையில், அவற்றை மாற்றி மீண்டும் ஓளிரவைக்கும் நோக்கில் மன்னார் நகரசபை  முதற்கட்டமாக 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா செலவில் 200 தெரு மின்விளக்குகளையும் அதற்கான உபகரணங்களையும்; கொள்வனவு செய்து மன்னார் மின்சாரசபையின் உதவியுடன் பொருத்தினர்.

இவ்விடயம் தொடர்பில் மன்னார் நகரசபையின் தலைவரிடம் கேட்டபோது, இப்பிரச்சினை தொடர்பில் மன்னார் நகரசபையிடம் மக்கள் பல தடவை முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள நகரசபை முயற்சிக்கின்றதெனக் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .