2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

இரணைப்பாலயம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 19 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


புதுக்குடியிருப்பு, இரணைப்பாலயம் பகுதியில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி வெடிபொருட்களை மன்னார் பொலிஸ் விசேட புலனாய்வுப்பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை  மீட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அங்கு சென்ற மேற்படி குழுவினர், புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

12.7 மில்லிமீற்றர் குண்டுகள் 217, 15 மில்லிமீற்றர் குண்டுகள் 18, ரீ 56ரக துப்பாக்கிகள் 370, எம்.பி,எம்.ஜீ குண்டுகள் 640, 18 மில்லிமீற்றர் எச்.இ.ஏ.ரி குண்டுகள் 2, கைக்குண்டு 1 ஆகியனவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட வெடிப்பொருட்களை செயலிழக்கச் செய்வதற்காக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .