2021 ஜனவரி 23, சனிக்கிழமை

மன்னாரில் சாதனையாளர்கள் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 20 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

நானாட்டான் அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் முருங்கன் ம.வி பாடசாலையில் நானாட்டான் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவர் ஜெயராஜ் மோத்தம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இந்தமுறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களும் பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களும் சாதனைகளை நிலைநாட்டியவர்களும்  கௌரவிக்கப்பட்டனர்.

இதற்கான நிகழ்வில்  அமைச்சர் ரிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், வடமாகாண ஆளுநரின் மன்னார், புத்தளம் பிராந்தியங்களின் ஆணையாளர்.எஸ்.எல்.டீன், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அலிகான் ஷரீப், முசலி பிரதேசசபையின் உபதலைவர் பைரூஸ்  உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .