2021 ஜனவரி 16, சனிக்கிழமை

முத்தையன்கட்டுக்குளத்தின் வான்கதவுகள் திறப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சுகந்தினி)

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முத்தையன்கட்டுக்குளத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திறந்துவிடப்பட்டுள்ளதாக அம்மாவட்டத்தின் அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தெரிவித்தார்.

முத்தையன்கட்டுக்குளத்தின் இரண்டு வான்கதவுகளும் 3 அங்குலத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளன. மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கும் முகமாகவே இவ்வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையெனவும் முத்தையன்கட்டுக்குளத்தின் நீர்ப்பாசனப் பிரிவு பொறியியலாளர் ஜி.செந்தூரன் கூறினார்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தண்ணீமுறிப்புக்குளத்தின் நீர்மட்டம் ஒரு அடிக்கு உயர்ந்துள்ளதாகவும் ஜி.செந்தூரன் கூறினார்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை 63 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 64 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளைஇ மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வவுனிக்குளத்தின் நீர் ஒரு அடி ஒரு அங்குலத்திற்கு வான் பாய்வதாக வவுனிக்குள நீர்ப்பாசனப் பிரிவு பொறியியலாளர் பா.விகர்ணன் கூறினார்.  வவுனிக்குளத்தில் நேற்று சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை 45 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .