2025 ஜூலை 12, சனிக்கிழமை

நாயாத்துவழி பிரதான வீதியில் இருந்து விசேட படகுச் சேவை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 29 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


மன்னார் - சங்குப்பிட்டி ஏ 32 பிரதான வீதி, நாயாத்து வழி பகுதியில் ஆற்றுநீர் பெறுக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் குறித்த வீதியூடான போக்குவரத்து கடந்த 3 தினங்களுக்கு மேலாக பாதிப்படைந்த நிலையில் காணப்படுகின்றது.

இதனால் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல்தீவு, சன்னார், ஈச்சலவக்கை, பெரியமடு, கோவில் குளம், சவேரியார்புரம், வேன் பிட்டி, வெள்ளாங்குளம் உட்பட பல கிராமங்களுக்கான போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளன.

இந்த நிலையில் இராணுவத்தின் 541ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில கடற்படையினர் படகுகள் மூலம் மக்களை ஏற்றி இறக்கும் சேவை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாயாத்து வழி பிரதான பாதை வெள்ள நீரில் மூழ்கியுள்ளதன் காரணத்தினால் குறித்த பகுதியில் இருந்து சுமார் 200 மீற்றர் வரை மக்களை படகுகள் மூலம் கடற்படையினர் ஏற்றி இறக்கி வருகின்றனர்.

குறித்த பகுதியில் பொலிஸார், கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் மக்களுக்கான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த படகுச் சேவையின் மூலம் குறித்த பிரதேசத்தில் இருந்து அவசர தேவைகளுக்காக மன்னார் பகுதிக்கும் மன்னாரில் இருந்து குறித்த பகுதிக்கும் படகுகள் மூலம் மக்கள் பாதுகாப்புடன் சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .