2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு த.தே.கூட்டமைப்பு உதவி

Kogilavani   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதீக்கப்பட்டு மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இடைத்தங்கள் முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்துள்ளது.

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட 6 இடைத்தங்கள் முகாம்களுக்கு இவ்வாறு பொருட்கள் முதற்கட்டமாக கையளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவர் வி.எஸ்.சிவகரன் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாந்தை மேற்கு பிரதேச சபையின் உப தலைவர் சீ.சௌந்தர நாயகம் ஆகியோர் குறித்த பொருட்களை வழங்கி வைத்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .