2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

குளத்தில் நீராடிய மாணவன் பலி

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 03 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

     (நவரத்தினம்)

வவுனியாவிலுள்ள குளமொன்றில் தனது நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த மாணவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வவுனியா, திருநாவற்குளத்தைச் சேர்ந்த வவுனியா தமிழ் மகாவித்தியாலத்தில் கல்வி கற்கும் இம்முறை க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய பிரபாகரன் சஜீபன் (வயது16) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது வீட்டுக்கு அண்மையிலுள்ள வவுனியா கரையானகுளத்தில் நேற்று புதன்கிழமை இரவு தனது  நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட பதில் நீதவான் அன்ரன் புனிதநாயகம் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன்,  சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .