2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

நிறுத்தல் அளவை உபகரணங்களுக்கு முத்திரையிடத் தவறினால் வழக்கு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 06 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம்


வவுனியா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் நிறுத்தல் அளவை உபகரணங்கள் முத்திரையிடப்பட்டு வருகின்றன. இவ்வாறு முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவை உபகரணங்களை வைத்திருப்போர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படுமென வவுனியா மாவட்ட அளவையீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் பிரிவின் பொறுப்பதிகாரி பா.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவை உபகரணங்களை வைத்திருப்போர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிறுத்தல் அளவை  உபகரணங்களுக்கான 2013ஆம் ஆண்டுக்குரிய முத்திரைகள் பிரதேச செயலகங்கள் தோறும் இடப்பட்டு வருகின்றன. இதில் தவறவிட்டவர்களின் நிறுத்தல் அளவை உபகரணங்களுக்கு மாவட்ட செயலகத்தில் முத்திரையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
நிறுத்தல் அளவை உபகரணங்களை வைத்திருக்கும் சகல வர்த்தகர்களும் தங்களது நிறுத்தல் அளவை உபகரணங்களுக்கு முத்திரையிட வேண்டும்.

இவ்வாறு முத்திரையிடப்படுவது 12 மாதங்களுக்கு செல்லுடியாகக்கூடியதாக இருக்குமெனக் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--