2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

மன்னார் சிறுவர் பூங்கா திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெனி


மன்னார் நகரசபைக்குச் சொந்தமான சிறுவர் பூங்கா புனர்நிர்மாணிக்கப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 இலட்சம் ரூபா செலவில் இச்சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலேயே மன்னார் நகரசபைக்குச் சொந்தமான சிறுவர் பூங்கா திறந்துவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகரசபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

இச்சிறுவர் பூங்கா திறப்பு விழாவுக்கு அதிகாரிகளுக்கு  உரிய முறையில் அழைப்பு விடுக்காத நிலையிலேயே திறந்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறு குறைபாடுளுடன் காணப்பட்ட இச்சிறுவர் பூங்கா, மன்னார் நகரசபை யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் அதிநவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 இலட்சம் ரூபா செலவில் விளையாட்டு வசதிகளை உள்ளடக்கியதாக இச்சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவின் புனரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் பூங்கா திறந்து வைக்கப்படுமென்று மன்னார் நகரசபை கடந்த 2 வாரங்களுக்கு முன்னர்; அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தது.

எனினும் இதன் திறப்பு விழாவை செய்யாமல் பிற்போட பல்வேறு அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.  சகலரும் ஒன்றிணைந்தபோதும், மன்னார் நகரசபைச் செயலாளர் எவ்விதத்திலும் ஆதரவு வழங்கவில்லை. அரசாங்க அதிகாரிகளை விருந்தினர்களாக அழைத்தபோதும்,  அவர்களும் கலந்து கொள்ளவில்லை.

ஆனாலும் மன்னார் நகரசபை தலைவர், உபதலைவர், உறுப்பினர்கள், நகரசபை பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு முழுமையான ஆதரவை வழங்கினர்.
 
இச்சிறுவர் பூங்கா திறப்பு விழாவின்போது அமைக்கப்பட்ட கல்வெட்டில் மன்னார் நகரசபையின் செயலாளரது பெயர் பதிவு செய்யப்படாத நிலையிலே அவர் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டார்.

தற்போது அரசாங்கத்தின் சுற்றறிக்கையின் பிரகாரம் அரசாங்க அதிகாரிகள் நிகழ்வுகளில் கலந்து கொள்வதாக இருந்தால் வடமாகான ஆளுநரிடம் அனுமதி பெறவேண்டுமென்ற நிலையேற்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி பெற கால தாமதம் ஏற்படுமென்றதன் காரணத்தினால்  நிதி ஒதுக்கினோர் மற்றும் உள்ளூராட்சிமன்றங்களின் தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டது.

மக்களின் நலனை கருத்தில் கொண்டே இச்சிறுவர் பூங்கா ஏற்கெனவே தீர்மானித்தபடி திறந்து வைக்கப்பட்டதாகக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X