2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வவுனியாவில் உடைப்பெடுத்த குளங்களை விவசாயத் திணைக்கள அதிகாரிகள் பார்வை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம்


வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் உடைப்பெடுத்த குளங்களை விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

பெரியமடுக்குளம் உடைப்பெடுத்தமையால் 110 ஏக்கர் நெற்பயிரும் நாவல்களம் உடைப்டுத்தமையால் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வயலும் பாதிப்படைந்துள்ளதாக ஓமந்தை கமநல கேந்திர நிலையத்தின் தலைவர் க.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

ஏனைய விவசாய நிலங்கள் மழையால் முழுமையாக அழிவடைந்துள்ளமையால் அனைத்து விவசாயிகளுக்கும் நஷ்டஈடு அரசாங்கத்தினால் வழங்கப்படவேண்டுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, உடைப்பெடுத்துள்ள குளங்களை தற்போது சீரமைப்பது தொடர்பிலும் விவசாயிகளுடன் கலந்துரையாடி வருவதாக கமநல சேவைகள் திணைக்களத்தின் பொறியியல் உதவியாளர் தணிகாசலம் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X