2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மன்னார் ஆயர் - அமைச்சர்கள் சந்திப்பு

Super User   / 2013 ஜூலை 24 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை சிரேஷ்ட அமைச்சர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளர்.மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் திஸ்ஸ கரலியத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மன்னார் மாவட்ட  கத்தோலிக்க குருமார்களுக்கும்  இடையில் சந்திப்பொன்று கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நேரில் கண்டறிவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இரண்டு அமைச்சர்களும் மன்னாருக்கு நேற்று சென்றுள்ளனர்.

இதன்போதே மன்னார் ஆயரை அமைச்சர்கள் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளர். மன்னாரில் காணப்படுகின்ற சட்டவிரோத மீள்குடியேற்றம், பாகுபாடான வேலைவாய்ப்பு வழங்குகின்றமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் மன்னார் மாவட்ட  கத்தோலிக்க குருமார்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--