2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் ஒருதொகுதி ஆயுதங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 26 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சிவகருணாகரன்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கோரக்கன்கட்டு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி ஆயுதங்களை மீட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த  தகவல்களின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை நேற்று வியாழக்கிழமை  மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆட்லரி செல்கள் 09, ஆட்லரி செல் பியுஸ்கள் 05, ஆர் பிஜி செல்கள் 02, ரி 56 ரைபில் 02, ரி 56 ரைபில் மகசின்கள் 06, 4 மில்லிமீற்றர்  எல்.எம்.ஜி.ஆர் ரைபில் 01, கைக்குண்டுகள் 19, கிளைமோர் குண்டுகள் 03, விடுதலைப்புலிகளின் அங்கிகள் 08, சி - 4 ரகபோர் வெடிபொருள் மருந்து 360 கிராம், டிக்னைட்டர் 15, 81 மில்லிமீற்றர் செல்கள் 04, 60 மில்லிமீற்றர் குண்டு 01, பராகுண்டு 03, விடுதலைப் புலிகளின் தயாரிப்பு அருள் குண்டு 2, சயனைட் குப்பிகள் 02, புஸ்ட்டர் 04, குண்டு துளைக்காத ஜக்கட் 01, தொலைத்தொடர்புக் கருவிகள் 05, ரவைகள் 1200 ஆகியனவே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--