2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

இரு மீனவர்களை காணவில்லை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மன்னாரில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர் திரும்பி வரவில்லையென தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார், பேசாலையிலிருந்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரே இவ்வாறு திரும்பி வரவில்லையெனவும் பொலிஸார் கூறினர். 

பேசாலையை சேர்ந்த டியூரன் அப்புகாமி (வயது 38), கமால்டீன் சமீன் (வயது 26) ஆகியோரே  கடற்றொழிலுக்காக படகில் சென்றிருந்தனர். இவர்களே திரும்பிவரவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் இம்மீனவர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்;.

இவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையை கடற்படையுடன் இணைந்து தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--