2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மன்னாரில் ஐ.ம.சு.கூ. வேட்பு மனு தாக்கல்

Kogilavani   / 2013 ஜூலை 31 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று மாலை வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அமைச்சர் றசிhட் பதீயுதீன் தலைமையில் வேட்பாளர்களான எந்திரி றொபேட் பீரிஸ், ஏ.றிப்கான் பதீயுதின், எஸ்.ரி.லிங்கேஸ்வரன் ஆகியோர் இணைந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், அமைச்சரின் இணைப்பாளர் என்.எம்.முனவ்பர் ஆகியோர் கலந்துகொண்டதோடு நூற்றுக்கணக்கான ஆதரவாலர்களும் கலந்துகொண்டனர்.

மன்னாரில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு சார்பாக எந்திரி றொபேட் பீரிஸ்,ஏ.றிப்கான் பதீயுதின், எஸ்.ரி.லிங்கேஸ்வரன், ஏ.எல்.மில்ஹான், எஸ்.எச்.அனீஸ் கரீம், எம்.எம்.அமீன், செல்வகுமரன் டிலான், அலிக்கான் சரீப் ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--