2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

குளவி கொட்டியதில் இருவர் வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பேசாலையில் சமூர்த்தி பணம் பெறச்சென்ற தலைமன்னார் பியர் கிராம மக்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை குளவி கொட்டியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

-மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட சமூர்த்தி பயணாளிகளுக்காண சமூர்த்தி கொடுப்பணவுகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்  தலைமன்னார் பியர் கிராம மக்கள் தமது மாதாந்த சமூர்த்தி கொடுப்பணவை பெற்றுக்கொள்ள இன்று காலை பேசாலை சமூர்த்தி வங்கிக்கு வருகை தந்தனர்.

இதன் போது மக்களுக்கு சமூர்த்தி பணம் வழங்கப்பட்டுக்கொண்டிருந்த போது மது போதையில் அவ்விடத்திடத்திற்கு வந்த ஒருவர் மரத்தில் இருந்த குளவிக்கூட்டின் மீது கல்லால் எறிந்துள்ளார்.

இதன் போது மரத்தில் இருந்த பெரும் குளவிகள் மக்களை துரத்தி துரத்தி கொட்டின.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--