2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

பெரியமடுவில் சிறுமி துஷ்பிரயோகம்: தாயின் இரண்டாம் தார கணவன் கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 17 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

12 வயதுடைய சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் அச்சிறுமியின் தாயின் இரண்டாம் தார கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், வவுனியா நெடுங்கேணி பெரியமடு பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுமியின் தாயாரது இரண்டாம் தார கணவனால் இச்சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சிறுமி வவனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சந்தேகத்தின் பேரில் தாயாரின் இரண்டாம் தார கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .