2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மரக்கடத்தலில் ஈடுபட்ட ஐவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}-நவரத்தினம் கபில்நாத்


அனுமதியின்றி சூட்சுமமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  5 பேர் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணி, நாவலர் வீதியில் சிறிய ரக ரக் வண்டி ஒன்றில் மறைத்துக்கொண்டு செல்லப்பட்ட அரியப்பட்ட மரக்கட்டைகளைக் கைப்பற்றியுள்ள அதேவேளை, ஒலுமடுக் கிராமத்திலிருந்து லொறி ஒன்றில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட மரக்குற்றிகளையும் கைப்பற்றியுள்ளதாக நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்,  பட்டிக்குடியிருப்பிலுள்ள  காட்டுப்பகுதியில்  கொண்டு செல்வதற்கு இலகுவாக அரியப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவை தொடர்பில் தங்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர்கள் 5 பேரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் 5 பேரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--